Friday, August 10, 2012

அனுபவம்


என்னடா தலைப்பு அனுபவம் அப்படின்னு இருக்கே  அப்ப சொல்ல போற  விஷயத்துல ஏதோ கருத்து , அறிவுரை,  இப்படி எல்லாம் இருக்குமோன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்..............அப்படி எல்லாம் கருத்து சொல்ல நான் ஒன்னும் பெரிய எழுத்தாளரோ பேச்சாளரோ  இல்லை :-) சாதாரண மென்பொருள் பொறியாளர்.

நானும் பட்டணத்துக்கு போயி சினிமா ல  சேர்ந்து நிறைய பணம் சம்பாரிச்சு பெரிய ஆள் ஆனதுக்கு அப்புறம் தான் இந்த ஊருக்கு திரும்பி வருவேன்னு அப்டீன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு சபதம் போட்டுட்டு  எங்க ஊரு கோயம்புத்தூர் ல இருந்து ரயில் புடிச்சு பெங்களூருக்கு வந்தேன் 2007 ல.  சான்ஸ் தேடி இல்லை இல்லை வேலை தேடி தெரு தெருவா சுத்தினேன்.

கொஞ்சம் வேலை இருக்கு அதை முடுச்சிட்டு வந்து மிச்சத்த  சொல்றேன்
குறுகிய வணிக இடைவேளைக்கு பிறகு தொடரும்
...........................................................

சுகன்யா

Monday, February 13, 2012

மெளனம்


பெண்கள் பேச்சில் சிறந்தவர்கள்
என்பது உண்மை தான்
ஆனால் ஆண்
தன் காதலை சொன்னதும்
அவர்கள் பேசும்
ஒரே மொழி மெளனம்

Sunday, September 11, 2011

புது உணர்வு

என் உறவாய் வந்தாய் நேற்று
உணர்வாய் நின்றாய் இன்று
உயிராகி விடுவாய் நாளை!!!!!!!!

Tuesday, November 23, 2010

தவ‌ம்

தோழி
காதலியானால்
வரம்
காதலி
மனைவியானால்
சாபம்

Thursday, November 18, 2010

அழகு

எனக்கு அழகு என்பது
மழைக்கு அழகு சேர்க்கும்
சாரல் போன்ற
உன் புன்னகையும்
மேகத்துக்கு அழகு சேர்க்கும்
வானவில் போன்ற
உன் மீசையும்

இரவுக்கு அழகு சேர்க்கும்
ந‌ட்சத்திர‌ம் போன்ற
உன் கண்களும்